இதோட சோர்ஸ் கோட் பவி (எ) பவித்ரா.எதிர் வீட்டு அனு அக்காவோட வெர்சன் 1.0 .வயசு 4.
*************************************************************************************
ஒரு நாள் எப்பவும் போல வீட்ல டிவி பாத்துட்டு இருந்தேன்.எங்க வீட்டுக்கு ஓடி வந்தது இந்த குட்டி டெர்ரரிஸ்ட் பவி.
"மாமா உனக்கு drawing தெரியுமா?"
"ஹ்ம்ம்"
"சரி இந்தா இந்த பேப்பர்ல என்ன வரைஞ்சி காமி"
பார்க்க கொஞ்சம் ஒல்லியா இருப்பா அப்படின்றதால எங்க வீடு ஜன்னல் கம்பி எக்சாம்ப்ல் வெச்சிக்கிட்டு ஒரு லைன் ஒன்னு போட்டு "இதா இப்படி தான் நீ இருக்க." என்றேன்.
"அப்படியா,இரு இப்போ நான் உன்ன வரையறேன்" அப்படின்னு சொல்லிட்டு வெளிய ஓடிடிச்சி.
கொஞ்ச நேரத்துல பேப்பர் கொண்டு வந்து என்கிட்டே குடுத்து "இதா இப்படி தான் நீ இருக்க"
திறந்து பாத்தா அதுல ஒரு வட்டம் போட்டு இருந்தது.
"உங்க வீட்டுக்கு வெளிய ஒரு பூதம் போட்டோ தொங்க விட்டு இருக்கேங்கள்ள அத வெச்சி தான் இத வரஞ்சேன் " அப்படின்னு சொல்லிட்டு எஸ்கேப் ஆனது லிட்டில் டெரரிஸ்ட்.
******************************************************************************
பவிக்கு அது லஞ்ச் டைம்.வீட்டு மாடில பராக்கு பாத்துடே சாப்ட வெச்சிட்டு இருந்தா அனு.பவி வாய்குள்ள போற சாப்பாடு விட நிறைய வெளிய தான் கொட்டி கிடக்கும்.அந்த டைம் பாத்து அங்க போன நான்,
"அச்சசோ பவி ,இங்க பாரு உன் பல்லு கீழ விழுந்து இருக்குது" .என்று சோற்று பருக்கை காட்டினேன்.
கீழே பார்த்து ஏமாந்து போன பவி என்ன பாத்து,
"மாமா அங்க பாரு காக்கா ஒன்னு செத்து கெடக்கு" என்று மேலே கை காட்டினாள்.
நானும் மேலே அண்ணாந்து பாத்து ," எங்க காணோம்?"
"செத்து போனா எப்படி அது மேல இருக்கும்,கீழ இல்ல விழுந்து கெடக்கும்" என்று சிரித்து விட்டு சாப்ட ஓடி போய்டிச்சி.
******************************************************************************
பவி வீட்ல எல்லாரும் function போக ரெடி ஆகிட்டு இருந்தாங்க.
சூ எடுத்துட்டு என்கிட்டே ஓடி வந்தா பவி.
"மாமா ,சூ போட்டு விடு"
"ஒரு கழுத வயசு ஆகுது.இன்னமும் உனக்கு சூ போட தெரியாதா.குடு"
சூ மாட்டி விட்டேன்.இடுப்புல கை வெச்சிட்டு என்னையும் சூ ரெண்டையும் மாத்தி மாத்தி பாத்துட்டு இருந்தா,
"என்ன லுக் விடற,கெளம்பு"
"ஏழு கழுத வயசு ஆயிடிச்சி.இன்னமும் உனக்கு எந்த கால்ல எந்த சூ மாட்டணும்னு தெரில".என்று தலையில் அடித்து கொண்டது .
**************************************************************************************
கொசுறு : ஒரு கழுத ஆவரேஜ் ஏஜ் 28 பக்கமாம்.நேத்தைக்கி தான் எனக்கும் தெரியும். பீ கேர்புள்.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இப்படி பல்பு வாங்கிய பின்னாடியும் நீ உசுருடா இருக்க நினைக்கும் போது........................
பதிலளிநீக்கு....................
......................
வார்த்தை முட்டுத்துடா... :)
படிக்க படிக்க சுவாரஸ்யம்.....
பதிலளிநீக்குஅருமையான தமிழ் எளியநடையில் சொல்லப்பட்டுள்ளது...
நல்ல காமெடி....
உன்னுடைய எழுத்து பயணம் தொடர எனது நல்வாழ்த்துக்கள்....
கலக்குற நீ....
என்றும் அன்புடன்,
கனகராசு
மிக நல்ல எழுத்துநடை தொடர்ந்து எழுதுங்கள் நண்பா...
பதிலளிநீக்குஇந்த பதிவு பலரையும் சென்றடைய ஓட்டு போடவும்....
Wish You Happy New Year
http://sakthistudycentre.blogspot.com
என்னையும் கொஞ்சம் Follow பன்னுங்கப்பா...