டிவி-ல காதலின் தீபம் பாட்டு ஓடின்னு இருக்க அதுக்கு லிப் மூமென்ட் குடுத்து உருகி பாடினு இருந்தான் மருது .அதுக்கு பக்கத்துல சந்துரு காதை மூடிட்டு தூங்க ட்ரை பண்ணிட்டு இருந்தான்.
"அதான் நீ பாடறியே - இது என்னத்துக்கு ??" - ரிமோட் எடுத்து ஆப் பண்ணான் சிவா.
"அட ச்சீ ரிமோட் குடு "
"நீதான் உன் ஹரிஹரன் வாய்ஸ் ஓபன் பண்ணியா.நான் கூட நம்ம ஏரியா எருமை எல்லாத்தையும் தப்பா பேசிட்டேன்."
"விடு மச்சி.காலில எந்திரிச்ச உடனே போய் அதுங்க கிட்ட சாரி கேட்டுடலாம்" - தூக்கத்தில் உளறினான் சந்துரு.
வாட்ச் எடுத்து சிவா டைம் பாக்க மணி காலைல 6."என்னடா ஆச்சி உனக்கு.எப்புமே அலாரம் அடிச்சா கூட ஆப் பண்றதுக்கு 6 மணி நீ எந்தரிசிதது இல்லியே.அதுவும் இன்னைக்கி சண்டே." - சிவா .
"ஒன்னும் இல்ல மச்சி.நீ தூங்கு"
"கொஞ்ச நாள் உன் activities சரி இல்லையே.வழக்கத்துக்கு மாதிரி இல்லாம இன்னைக்கி உன் மொகத்துல சந்தோஷ ரேகை அதிகமா தெரியுதே.என்னடா மேட்டர் ?"
"லைட் போடாம பாத்தா அவன் அப்படி கொடூரமா தாண்டா தெரிவான்" - இன்னமும் தூக்கத்தில் பேசிட்டு இருந்தான் சந்துரு.
"லவ் மூட் ஸ்டார்ட் ஆனா எல்லாம் அப்படி தான் "இவ்ளோ நேரம் தூங்கிட்டு இருந்த சந்துரு இந்த பதிலை கேட்டஉடனே விழுந்தடிச்சி எந்திரிச்சான்.
"என்ன சொல்ற மச்சி ?? லவ் மூடா ?? ""ஆமா"
" என்னடா சொல்லற." அதிர்ச்சியுடன் "யாரு அந்த பொண்ணு ?" - சிவா
"என்னோட காலேஜ் மேட் மச்சி.கொஞ்ச நாள் முன்னாடி திரும்ப மீட் பண்ணேன் .ரெண்டு பேரும் கொஞ்ச நாலா பேசிட்டு இருக்கோம்.இன்னைக்கி 5 மணிக்கி தனியா மீட் பண்ணலாம்னு பிளான். ""அட பாவி.சொல்லவே இல்ல.அப்போ டேட்டிங்?"
" எஸ். பாரிஸ்டா மீட் பண்ணலாம்னு பிளான்."
"டேய் நெசமாத்தான் சொல்லறியா? இல்ல நைட் ஏதாவது கனவு கண்டியா?"
தனக்கு வந்த எஸ்.எம்.எஸ் எடுத்து காமிச்சான் மருது.ரெண்டு பேருக்கும் உள்ளுக்குள்ள புகைய ஆரமிச்சது.,இருந்தாலும்
"மச்சி எங்கள்க்கும் இன்ட்ரோ குடுடா"
"பாக்கலாம்.ட்ரை பண்ணறேன் "
இதுக்கு மேல கேட்டு அவமான பட வேணாம்னு ரெண்டு பேரும் அமைதி ஆனாங்க.
மணி 4 ஆக,மருது ரெடி ஆயிட்டு கெளம்ப இருந்தான் .
"மச்சி இருடா நாங்களும் வரோம்.அப்படியே நாயர் கடைல காபி அடிச்சிட்டு போலாம்" - சந்துரு ரெடி ஆனான் .
"உஷ் நான் basically பசங்களோட எல்லாம் காபி சாப்டறது இல்ல.இருந்தாலும் நீ ஆசபட்டுட்ட சரி வா போலாம்" .
"நாராயணா இந்த கொசு தொந்தரவு தாங்க முடில.மருந்து அடிச்சி மொதல்ல கொல்லனும். " இப்படி ஒரு வழியா காபி முடிஞ்சி மருது டேட்டிங்க்கு கெளம்பிட்டான்.
மருது திரும்ப வரும்பொழுது மணி 8."அப்புறம் மச்சி.இன்னைக்கி பார்ட்டி தான்.எல்லாரும் மருது பேர்ல மொய் எழுதிடலாம்." - சிவா.
சலிப்புடன் சிவா பக்கத்துல போன மருது "ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒவ்வொரு பீலிங் மச்சி.இதுக்கான அர்த்தம் இன்னைக்கி தான் எனக்கு முழுசா புரிஞ்சது".
"சரி சரி.பேச்சை குற.கதைய சொல்லு"
"நான் கரெக்டா 5 மணிக்கி எல்லாம் போய் ஒரு கார்னர் டேபிள் புடிச்சி அவளுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன்"
"கடைசி வரைக்கும் அவ வரவே இல்லையா?" - ஆர்வத்துடன் கேட்டான் சந்துரு.
"நீ நெனைக்கிற மாதிரி எல்லாம் இல்ல .அவ 5:30 பக்கமா அங்க வந்தா.வந்த உடனே "சாரி அயம் லேட்" அப்படின்னு சொன்னா
"இட்ஸ் ஓகே.டேக் யுவர் சீட்" - இது நானு.
"தேங்க்ஸ்.ஹவ் யு டூஇங்?"
"ஓக்ஸ்.யு ஆர் லுகிங் ப்ரெட்டி டுடே" - அப்படின்னு பிட்ட போட்டேன்.
சந்துரு செம காண்டு ஆயிட்டான் - "டேய் நம்ம ஹாரி பாட்டர் படமே அரிசிவமூர்த்தி - தமிழில் அப்படின்னு டப் பண்ணி பாக்கற ஆளுங்க.டப் பண்ணி சொல்லுடா ஒன்னும் புரில".
"ப்லொவ் மிஸ் ஆகுதுடா.நீ சொல்லு மச்சி" - சிவா.
"அப்படியே கொஞ்ச நேரம் பேசிட்டு ஆர்டர் பண்ணோம்."
"ஹ்ம்ம்.அப்பறம்?"
"ஒரு முக்கியமான விஷயம்" - அப்படின்னு ஆரமிச்சா . "அதுக்கு தான் இங்க வர சொன்னேன்.தப்பா எடுத்துக்காத .உன்னால கண்டிப்பா இத பண்ண முடியும்." அப்படின்னு சொல்லிட்டு அவ வெச்சிருந்த பாக்ல இருந்து ஒரு பேப்பர் எடுத்தா.
"அட பாவி - லவ் லட்டர்ஆ "
"இல்ல.அங்க தான் விதி பெருசா வேலைய காட்டிச்சி"
"என்ன?"
"அவ ரிலையன்ஸ் லைப் இன்சூரன்ஸ்-ல வேலைல இருக்காலாம்.ஒரு புது பாலிசி இப்போ வந்திருக்குதாம்.அத பத்தி விளக்கம் சொல்ல தான் உன்ன இங்க கூப்டேன் .இந்த வாரதுக்குள்ள கண்டிப்பா ஒருத்தர புடிக்கணும் .நீதான் பாலிசி போட்டு எனக்கு ஹெல்ப் பண்ணனும் அப்படின்னு சொல்லிட்டா.எனக்கு பப்பி சேம் ஆகி போச்சி மச்சி."
இது வரைக்கும் அமைதியா கேட்டுட்டு இருந்த சிவா,சந்துரு இப்போ கால் கொட்டி சிரிக்க ஆரமிச்சிட்டாங்க.
"மச்சி. அவ உன்னைய மளிகை சாமான் வாங்கிட்டு வர சொல்லிருக்கா பா".