ஞாயிறு, 2 ஜனவரி, 2011

ஏழு கழுத வயசாய்ச்சி

குழந்தைகள் கண்ணாடி பிம்பம் போன்றவர்கள் - நீங்க எந்த அளவுக்கு அவுங்களுக்கு பல்பு குடுகறீங்கலோ அத விட இன்னமும் அழகா இரண்டு மடங்கு உங்களக்கு பல்பு கிடைக்கும் அப்படின்றது எழுதபடாத உண்மை.அப்படி வாங்கின சில பல்புகளில் இருந்து சிதறிய சில தன்க்ச்டேன்,கிளாஸ் துகள்களை தான் இங்க கொட்ட போறேன்.(கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகணும் இல்ல அதான் இப்படி).

இதோட சோர்ஸ் கோட் பவி (எ) பவித்ரா.எதிர் வீட்டு அனு அக்காவோட வெர்சன் 1.0 .வயசு 4.
*************************************************************************************
ஒரு நாள் எப்பவும் போல வீட்ல டிவி பாத்துட்டு இருந்தேன்.எங்க வீட்டுக்கு ஓடி வந்தது இந்த குட்டி டெர்ரரிஸ்ட் பவி.

"மாமா உனக்கு drawing தெரியுமா?"

"ஹ்ம்ம்"

"சரி இந்தா இந்த பேப்பர்ல என்ன வரைஞ்சி காமி"

பார்க்க கொஞ்சம் ஒல்லியா இருப்பா அப்படின்றதால எங்க வீடு ஜன்னல் கம்பி எக்சாம்ப்ல் வெச்சிக்கிட்டு ஒரு லைன் ஒன்னு போட்டு "இதா இப்படி தான் நீ இருக்க." என்றேன்.

"அப்படியா,இரு இப்போ நான் உன்ன வரையறேன்" அப்படின்னு சொல்லிட்டு வெளிய ஓடிடிச்சி.

கொஞ்ச நேரத்துல பேப்பர் கொண்டு வந்து என்கிட்டே குடுத்து "இதா இப்படி தான் நீ இருக்க"


திறந்து பாத்தா அதுல ஒரு வட்டம் போட்டு இருந்தது.



"உங்க வீட்டுக்கு வெளிய ஒரு பூதம் போட்டோ தொங்க விட்டு இருக்கேங்கள்ள அத வெச்சி தான் இத வரஞ்சேன் " அப்படின்னு சொல்லிட்டு எஸ்கேப் ஆனது லிட்டில் டெரரிஸ்ட்.

******************************************************************************
பவிக்கு அது லஞ்ச் டைம்.வீட்டு மாடில பராக்கு பாத்துடே சாப்ட வெச்சிட்டு இருந்தா அனு.பவி வாய்குள்ள போற சாப்பாடு விட நிறைய வெளிய தான் கொட்டி கிடக்கும்.அந்த டைம் பாத்து அங்க போன நான்,

"அச்சசோ பவி ,இங்க பாரு உன் பல்லு கீழ விழுந்து இருக்குது" .என்று சோற்று பருக்கை காட்டினேன்.

கீழே பார்த்து ஏமாந்து போன பவி என்ன பாத்து,

"மாமா அங்க பாரு காக்கா ஒன்னு செத்து கெடக்கு" என்று மேலே கை காட்டினாள்.

நானும் மேலே அண்ணாந்து பாத்து ," எங்க காணோம்?"

"செத்து போனா எப்படி அது மேல இருக்கும்,கீழ இல்ல விழுந்து கெடக்கும்" என்று சிரித்து விட்டு சாப்ட ஓடி போய்டிச்சி.

******************************************************************************

பவி வீட்ல எல்லாரும் function போக ரெடி ஆகிட்டு இருந்தாங்க.

சூ எடுத்துட்டு என்கிட்டே ஓடி வந்தா பவி.

"மாமா ,சூ போட்டு விடு"

"ஒரு கழுத வயசு ஆகுது.இன்னமும் உனக்கு சூ போட தெரியாதா.குடு"

சூ மாட்டி விட்டேன்.இடுப்புல கை வெச்சிட்டு என்னையும் சூ ரெண்டையும் மாத்தி மாத்தி பாத்துட்டு இருந்தா,

"என்ன லுக் விடற,கெளம்பு"

"ஏழு கழுத வயசு ஆயிடிச்சி.இன்னமும் உனக்கு எந்த கால்ல எந்த சூ மாட்டணும்னு தெரில".என்று தலையில் அடித்து கொண்டது .
**************************************************************************************

கொசுறு : ஒரு கழுத ஆவரேஜ் ஏஜ் 28 பக்கமாம்.நேத்தைக்கி தான் எனக்கும் தெரியும். பீ கேர்புள்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

வெள்ளி, 24 டிசம்பர், 2010

குருவி - தி கில்லி

குருவி - இந்த நாட்டுல தட்டு தடுமாறி திசைமாறி கெட்டுபோன கெட்டிகார பசங்கள்ள இவனும் ஒருத்தன். ஷார்ட்டா சொல்லனும்னா இவன் ஒரு மொள்ளமாரி . மீடியம் - ஆ சொல்லனும்னா எக்ஸ்-ரூம்மேட்.

முதல் சந்திப்பில் போதே மூக்கின் மேலே விரல் வெக்கிற மாதிரி கேள்வி கேட்பான்.என்கிட்டயும் அப்படி தான் கேட்டான்.

"பாத்ரூம் எங்க இருக்கு ?" - அப்படின்றது தான் என்ன பாத்து கேட்ட கேள்வி.

படிக்கிற பசங்களுக்கு இருக்கிற முக லட்சணம் எல்லாம் அமைய பெற்ற இவன் படிப்புல ஒரு பியுஸ் போன குண்டு பல்பு அப்படின்றது எனக்கு அப்போ தெரியாது.காலேஜ் டைம்ல முதல் முறையாக ரூம் ஷேர் பண்ணிட்டு இருந்த டைம் அது.


"Toiletla பேப்பர் இருக்கா?" - என்று கேட்டவனுக்கு படிக்கதான் கேக்கறான்னு நினைச்சி நான் குடுத்தது தினத்தந்தி பேப்பர்.

"இது இல்ல" - என்று மறுத்த அவனுக்கு பல்பு வாங்குவது கூட தெரியாமல் மறுபடி நான் ஹிந்து பேப்பர் நீட்ட நக்கலாய் சிரித்தான்.அதற்க்கான காரணம் எனக்கு புரிய ரொம்ப நாள் ஆச்சி.

சரி பைய செம பிஸ்து போல அப்படின்னு நினைக்கிற வகையில் அவனோட நடவடிக்கைகள் இருந்தது. ஆனா அதெல்லாம் வெத்து சீன் அப்படின்றது தினத்தந்தி பேப்பர்ல சினிமா,ஸ்போர்ட்ஸ் பகுதி மட்டும் படிச்சிட்டு தூக்கி போடும் போதே புரிஞ்சது.

ரெண்டு பேரும் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் ஒரே பேட்ச் அப்படின்றதால அறிமுகத்துக்கும்,பழகுவதிலும் பெருசா ஒன்னும் சிரமம் ஏற்படல.

பஸ்ட் டே கான்டீன்லதான் சாப்ட போனோம். லஞ்ச் நான் சாப்ட ஆரமிக்க அவன் எதோ தேட ஆரமிச்சான்.

"என்ன தேடற?"

"இல்ல கைல சாப்ட நான் ரொம்ப டைம் எடுத்துப்பேன்.ஒரு நிமிஷம் வந்துடறேன்"

நேரா கவுன்ட்டர் போனவன்,

"ஹலோ,fork இருக்கா?"

"இல்லைங்க,இங்க போர்க் எல்லாம் போடறது இல்ல.நான்வெஜ் - ல ஒன்லி சிக்கன் அப்புறம் பிஷ் மட்டும் தான்" - என்று பல்பு குடுத்து அனுப்பினார்.இதெல்லாம் வெறும் சாம்பிள் தான்.

ஒரு வழியா சாப்டு முடிச்சிட்டு மதியம் கம்ப்யூட்டர் லேப்க்கு போய் சேர்ந்தோம்.ஆர்டர் படி சீட் பண்ணதால நான் ஒரு இடத்திலும் குருவி வேற ஒரு இடத்திலும் இருந்தோம்.முதல் நாள் அப்படின்றதால லேப் அட்டெண்டர் தவிர யாரும் இல்ல.எல்லாரயும் போல நானும் solitaire ஓபன் பண்ணி டைம் பாஸ் பண்ண ஆரமிச்சேன்.

கொஞ்ச நேரத்துல வந்தான் குருவி,

"கொஞ்சம் என் ப்ளேஸ்க்கு வா.என் சிஸ்டம் வொர்க் ஆகல"

நம்ம கிட்டயும் ஒருத்தன் டவுட் கேக்கறானே அப்படின்னு ஒரு பூரிப்பு இருந்தாலும் வெளிய காட்டிக்காம போனேன்.

"என்ன பிரச்சனை?"

"சிஸ்டம் ஸ்டார்ட் ஆகவே இல்ல" - என்றான்.

நானும் CPU ஆப் செஞ்சி மறுபடி மறுபடி on பண்ணி பாக்க டிஸ்ப்ளே வரவே இல்ல.ஒரு வேல power இல்லியோ இவன் புடிங்கி விட்டு டெஸ்ட் பண்றானோ என்று கீழே குனிந்து பார்க்க என்னை அடிக்காத குறையா குருவி பாத்தான்.

"அதெல்லாம் ஏற்கனவே நான் செக் பண்ணிட்டேன்"

"அப்போ இது ஹார்ட்வேர் பிரச்னை தான்" - என்று எனக்கு தெரிஞ்ச ஒரு டெர்ம் சொல்லி தப்பிக்க நினைச்சேன்.

"இல்ல இது மாதிரி வந்தா இது சாப்ட்வேர் பிரச்னையா தான் இருக்கும்" - என்று கவுன்ட்டர் குடுக்க ஆரம்பித்தான் குருவி.

ஹார்ட்வேர்,சாப்ட்வேர் என்ற பேச்சு லேப் அட்டெண்டர் காதுல விழ நேரா அங்க வந்து சேர்ந்தார்.

"வாட் இஸ் தி ப்ராப்லம்?"

நான் பிளாஷ்பாக் எபிசொட் ஓடி முடித்தேன்.

"தம்பி இது நீங்க சொல்லற மாதிரி எந்த பிரச்னையும் இல்ல.நீங்க பக்கத்து சிஸ்டம் CPU On பண்ணிட்டு உங்க சிஸ்டம் செக் பண்ணிட்டு இருக்கீங்க.உங்க CPU இந்த பக்கமா இருக்கு."

"ஒ சாரி சார்.நான் லேப்ல நெட்வொர்க் கனெக்ஷன் இருக்குன்னு நெனச்சேன்" - குருவி சொன்னதை கேட்டு மயங்கி விழுந்தார் அட்டெண்டர்.

செவ்வாய், 21 டிசம்பர், 2010

வேட்டைக்காரன்

"இதுக்கு மேல ஒரு நொடி வேஸ்ட் பண்ணாலும் நம்ம எல்லாருடைய உயிருக்கும் ஆபத்து.நான் அப்போவே சொன்னேன் தூக்கிடலாம் அப்படின்னு.நீங்க தான் அப்போ இத சீரியஸ் -ஆ எடுத்துக்கவே இல்ல"

"இதுக்கெல்லாம் ஒரே முடிவு encounter தான்"

"பிளான் இதுதான்.நம்ம சக்ர வியூகம் வெச்சு அட்டாக் பண்ணா தான் ஆபரேஷன் சீக்கிரமா முடிக்க முடியும்.நான் முதலில் அந்த ரூம் உள்ள போய் நேருக்கு நேரா அட்டாக் பண்ணறேன்.சேது நீ ரைட் சைடு-ல weapons வெச்சிட்டு ரெடியா இரு. சீனு நீ லெப்ட் சைடு பாத்துக்கோ.கவனமா இருங்க"

weapons எடுத்துட்டு சேது,சீனு அண்ட் விஜய் அட்டாக் பண்ண கிளம்பினார்கள்.

விஜய் நேரா போய் கேஸ் சிலிண்டர் மெதுவாக நகர்த்த இவுங்க தேடிட்டு இருந்த அந்த எலி அவுங்களுக்கு இன்ட்ரோ குடுத்தது.


"பாத்தியா போன வாரம் பார்த்ததுக்கும் இன்னைக்கும் ஒரு சுத்து நல்லா பெருத்து போயிருக்கு"

"சும்மாவா என்னோட மேக்ஸ் புக் முழுசா அது வயத்துல இல்ல இருக்கு" -விஜய்.

பிளான் படி விஜய் நேரா அட்டாக் பண்ண எஸ்கேப் ஆகி லெப்ட் சைடு ஓட ஆரம்பித்தது.சீனு அங்க ரெடியா நின்னுட்டு இருந்தான்.

"அங்க என்ன பராக்கு பாத்துட்டு இருக்க.ஒரே போடு காலி பண்ணு."

புட்பால் கோல் கீபர் போல சீனு நின்னுட்டு இருக்க,அவனோட இடது பக்கம் ஓடற மாதிரி பாவ்லா காமிச்சி வலது பக்கம் திரும்பி அவனின் இரண்டு காலின் கேப்-ல கோல் போட்டு எஸ்கேப் ஆனது எலி.

"போஸ் குடுத்தது போதும்.பின்னாடியே போய் காலி பண்ணு" - விஜய்.

எலி ஓடற திசைல படு வேகமாஅதை துரத்தி கொண்டு ஓடிட்டு இருந்தான் சீனு.நடுவுல இருக்கிற தூண் பாத்துட்டு எலி வளைவாக ஓட,சீனுவின் கால் பிரேக் பெயில் ஆகி தூண் மீது ஆக்சிடென்ட் ஆனது.இதற்க்கு மேல முடியாது அப்படின்னு ரிடயர் ஆனான்.

"சரி இப்போ நான் அது பின்னாடி துரத்திட்டு போறேன்.நீ எதிர்ல அது வரும் போது கால் வெச்சி பிளாக் பண்ணு.தூக்கிடலாம்" - விஜய் ரெண்டு பேர் கொண்ட பிளான் ரெடி பண்ணான்.

விஜய் பிளான் படி அட்டாக் செய்ய சேது காலுல ஹை ஜம்ப் அடிச்சி நேரா பாத்ரூம் நோக்கி ஓடியது எ பிளஸ் லி.

பிளான்-ல எதிர்பாரா திருப்பமாக பாத்ரூம்ல இருக்கிற பெரிய பக்கெட்ல தாறுமாறா ஓடி உள்ளே புகுந்த எலி வெளிய வர முடியாமல் திணறி மாட்டி கொண்டது.

"மச்சி சக்சஸ்.எலி மருந்து,பொறி எல்லாத்துக்கும் டிமிக்கி குடுக்கறது இவ்ளோ சீப்பா மாட்டிகிச்சி பாத்தியா" - சேது.

"அப்படியே பத்திரமா கொண்டு போய் வெளிய விட்டுட்டு வா." - விஜய்.

சேது கவனமாக வீட்டுக்கு வெளியே உள்ள ஒரு ஒதுக்கு புறமான இடத்துல கொண்டு போய் பக்கெட் கவிழ்த்தான்.விடுதலை ஆனா எலி மறுபடி ஒரு U- turn அடித்து நேராக மறுபடி இவர்கள் வீட்டை நோக்கி ஓட ஆரமித்தது.

சேது,விஜய் தலைல கை வெச்சிட்டு பாத்துட்டு இருக்க,

உற்சாகமாக ஓடிய எலி வீட்டின் வாசலில் இருந்த விஜய்- இன் சாக்ஸ் மேல ஓடிய அடுத்த கணமே சுருண்டு விழுந்து இறந்தது.

வியாழன், 16 டிசம்பர், 2010

வீட்ல யாரும் இல்ல

"உங்க ரெண்டு பேருக்கும் என்ன தாண்டா பிரச்சனை.ஏன் இப்போ கொலவெறியா அவன போட்டு அடிச்சிட்டு இருக்க? " - சண்டை போட்டுட்டு இருந்த வசந்த்,அருண் நடுவுல புகுந்து பஞ்சாயத்து பண்ணிட்டு இருந்தான் பிரகாஷ்.

"மச்சி நீ நடுவுல வராத.இவன போட்டு இன்னைக்கி மிதிச்சா தான் என் ஆத்திரம் அடங்கும்" - செம கோவத்துல இருந்தான் வசந்த்.

"பிரச்னை என்னனு மட்டும் சொல்லு.நாங்களும் ப்ரீயா தான் இருக்கோம்.உனக்கு ஹெல்ப் பண்ணறோம்.தெளிய வெச்சி தெளிய வெச்சி 3 நாளைக்கி அடிப்போம்" .

அடிக்கறத நிறுத்திட்டு ப்ளாஷ்பாக் ஓட்ட ஆரமிச்சான் வசந்த்.

"போன வாரம் அவன் என்ன கேட்டான் ஞாபகம் இருக்கா?"

"அவன் எப்பவுமே எல்லார்கிட்டயும் ஏதாவது கேட்டுட்டே தான் இருக்கான்.இதா இப்போ கூட அங்க பாரு அந்த பொண்ணு கிட்ட டைம் கேட்டுட்டு இருக்கான்.மேட்டர நீயே சொல்லு" - பிரகாஷ்.

"மேக்ஸ் எக்ஸாம் ஏற்கனவே ரெண்டு தடவ கப் வெச்சிட்டேன்.அரியர் வெச்ச மேட்டர் வீட்ல வேற தெரியாது .இந்த தடவ கண்டிப்பா கிளியர் பண்ணனும்.அதுக்கு நீதான் கத்து குடுக்கனும்னு கேட்டான்".

"ஒ அதுவா.சரி சரி அதுக்கு?"

"புக் நானே வெச்சிருக்கேன் என் வீட்டுக்கு வந்து சொல்லி குடு அப்படின்னு சொன்னான். நானும் சரி உன் வீட்ல யாரும் இல்லாத போது சொல்லு.நான் கண்டிப்பா வந்து சொல்லி குடுக்கறேன்னு சொன்னேன்"

"சரி .மேல?"

"நேத்தைக்கு மதியமா எனக்கு கால் பண்ணான்.மச்சி என் வீட்ல யாரும் இல்லடா அப்படின்னு சொன்னான்"

"ஓகே"

"நானும் அவசர அவசரமா கிளம்பி அவுங்க வீட்டுக்கு போனேன்."

"அப்புறம்"

"வீட்டுக்கு போய் பாத்த உடனே எனக்கு செம கடுப்பு ஆயிடிச்சி"

"ஏன்?"

"நிஜமாவே வீட்ல யாரும் இல்ல.வீடு பூட்டு போட்டு இருந்தது.இன்னைக்கி வந்து கேட்டா எல்லாரும் குடும்பத்தோட சர்க்கஸ் போயிருந்தோம் அப்படின்னு சொல்லிட்டு சிரிக்கிறான்". - சொல்லிட்டு வசந்த் கொல வெறியோட அருண் - ஐ பாத்துட்டு இருந்தான்

"இந்த காமெடி எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் மச்சி.இவன போட்டு அடிச்சிட்டு இருந்தியே அது எதுக்கு அத சொல்லுடா" - என்றான் பிரகாஷ்.

இப்போ பிரகாஷ் போட்டு அடிச்சிட்டு இருக்கான் வசந்த்.யாரு வந்து அத பஞ்சாயத்து பண்ண போறாங்கன்னு தெரில..?

ஞாயிறு, 12 டிசம்பர், 2010

சில்லர பய

" அது ஏண்டா என்ன பாத்து இந்த கேள்வி கேட்ட? எத்தன பேர் இருக்காங்க ? அவங்கள எல்லாம் விட்டுட்டு என்ன பாத்து எப்படி நீ கேக்கலாம்? " - கொதித்து எழுந்தான் மணி.

"விட்ரா.எதோ தெரியாம கேட்டுட்டேன்.இந்த சின்ன விஷயத்துக்கு போய் இப்படி கத்துற ?"

"நேத்தைக்கு என்கிட்டே 200 ரூபா தான் இருக்குனு சலிப்பா சொல்லிட்டு இருந்தேன்.அதையும் மீறி இன்னைக்கி 1000 ரூபா நீட்டி சில்லரை இருந்தா குடு அப்படின்னு கேட்டு அவமான படுத்தற. எப்போ பாத்தாலும் சில்லரை வெச்சிருக்க நான் என்ன பஸ் கண்டக்டரா இல்ல கோயில் பூசாரியா?"

"ப்ரீயா விட்ரா.மறந்துட்டேன்" - சமாதான படுத்திட்டு இருந்தான் அன்பு.

ரெண்டு நாள் முன்னாடி ATM-ல பணம் எடுக்க போய் ஒரு 1000 ரூபாய் நோட் அன்பு கிட்ட வந்துடிச்சி.அதுக்கு சில்லற கேக்க போய் தான் இப்படி மணி கிட்ட வாங்கி கட்டிகிட்டான்.

"சரி இப்போ இத மாத்தறதுக்கு ஒரு ஐடியா குடு"

"இதுக்கெலாம் சரியான இடம் பெட்ரோல் பங்க் தான்.ஆனா இப்போ அவுங்களும் பந்த்.அதனால வேற எதாவது தான் யோசிக்கணும்"

"சரி வா தி.நகர் போலாம்.நீ புக் வேற வாங்கனும்னு சொன்ன இல்ல.ரெண்டு கல்லுல ஒரே மாங்கா" - மணி .


பஸ்ல ரெண்டு பேரும் தி.நகர் கிளம்பினார்கள்.

"மச்சி கண்டக்டர் பை நிறைய சில்லற வெச்சிருக்காரு.அவர் கிட்ட குடுத்து சில்லற மாத்திக்கலாம்" - அன்பு ஆயத்தமானான்.

"ஏற்கனவே ஒருத்தன் 10 ரூபாய் குடுத்து 2 ரூபாய் டிக்கெட் எடுத்தான்.அதுக்கே அவரோட ரெண்டு கிட்னியும் அவன் கேட்ட மாதிரி இன்னமும் வெறிச்சி பாத்துட்டு இருக்காரு.நீ மட்டும் போய் இந்த நோட் காமிச்ச ஒரு கலவரமே வெடிக்கும்.பாமிலி புல் Damage ஆயிடும்.யார் கிட்ட வேணும்னாலும் கேக்கலாம்,இவர்ட்ட மட்டும் வேணாம்".


தி.நகர் வந்து சேர்ந்து புக் ஸ்டோர் உள்ள போனாங்க.பாலகுருசாமி புக் ஒன்னு எடுத்திட்டு பில் போட வந்தான் அன்பு.

1000 ரூபாய் நீட்ட "சார் சில்லற இல்ல" - என்று கை விரித்தான் கடை ஆள்.

"மச்சி வேணும்னா ரெண்டு புக் சேர்த்து வாங்கிக்கலாமா."

"நம்ம என்ன புக் ஸ்டோரா ஆரம்பிக்க போறோம்.புக் குடுத்துட்டு வாடா".

முயற்சி தோல்வில முடிய தி.நகர் புக் ஸ்டோர் புல்லா ரவுண்டு விட்டானுங்க.எங்கயும் சில்லற கெடைக்கல.

"சரி அடுத்து எங்க போறது?" - அன்பு.


"சரி வா லேண்ட்மார்க் போலாம்.அங்க போய் புக் வாங்கிட்டு சில்லற மாத்திக்கலாம்" - மணி.


ரெண்டு பேரும் அங்க இருந்து கிளம்பன நேரம் மழை சரமாரியாக அடிக்க ஆரமிச்சது.பஸ்சில் ஏறி தொப்பலாக நனைந்து ஸ்பென்சர் கிட்ட வந்து சேந்தாங்க.ஸ்பென்சர் வாசலில் அவுங்களை மடக்கினான் ஒரு பிச்சைக்காரன்.


"ஐயா சில்லற காசு இருந்த போடுங்க".


"சத்திய சோதனை-டா அன்பு" - என்று பீல் பண்ண ஆரமித்தான் மணி.

பிச்சைக்காரனை விரட்டி விட்டுட்டு "மச்சி அவனுக்கும் நமக்கும் ஒரே வித்தியாசம் தான்.அவன் வெளிய நின்னுட்டு சில்லற கேக்கறான்.நம்ம உள்ள போய் சில்லற கேக்க போறோம்.செம காமெடியா இல்ல" - என்றான் அன்பு.அடிக்காத குறையா மணி முறைக்க அமைதி ஆனான்.

ஸ்பென்சர் உள்ளே நுழைந்தார்கள்.லேண்ட்மார்க் நோக்கி போயிட்டு இருந்தாங்க.

"மச்சி நான் வெயிட் போட்டுட்டேனாடா" அன்பு.


"இந்த நேரத்துல இந்த ஆராய்ச்சி ரொம்ப அவசியமா.ஒரு 1000 ரூபாய் இருக்கறதால நீ வெயிட் பார்ட்டி அப்படின்னு நெனைக்கலாம்.ஆனா வெயிட் போட்டுருக்க வாய்ப்பு இல்ல"


"இல்ல அங்க ஒரு வெயிங் மெசின் இருக்கு.வெயிட் செக் பண்ணிட்டு போலாம்"


"இந்த ரணகலதலையும் உனக்கு ஒரு கிளுகிளுப்பு கேக்குது.சரி சீக்கிரமா வா" .

வெயிட் பாத்த வேகத்துல வந்த அன்பு " எப்பயுமே வெயிட் பாத்துட்டு போனா எனக்கு ராசி டா.இப்போ பாரு எப்படி சில்லற தானா வந்து சேருதுன்னு"

"என்னடா லாஜிக் இது.ரெண்டுத்துக்கும் சம்பந்தமே இல்லையே.பாப்போம் அதையும்" - மணி.

லேன்ட்மார்க் உள்ள போய் அதே பாலகுருசாமி புக் எடுத்தான் அன்பு.நேரா கவுன்ட்டர் கிட்ட வந்து பில் போட்டுட்டு இருக்க நடுவுல அன்பு ,

"1000 ரூபாய் தான் இருக்கு.சில்லற குடுப்பிங்களா?" - அப்படின்னு டவுட் கேட்டான்.

பில் போடுற பொண்ணு நக்கலா சிரிக்க ஆரமிக்க.

தலைல அடிசிக்கிட்டான் மணி."டேய் மானத்த வாங்காத பைசா குடுத்து தொலடா".

1000 ரூபாய் நோட்டை பில்லுக்கு குடுத்த அப்பறமா நிம்மதி ஆனான் அன்பு.வெற்றி புன்னகை ரெண்டு பேரும் விட்ட நேரத்துல,

"சார் நோட் கிழிஞ்சிருக்கு.வேற இருந்தா குடுங்க" .

செவ்வாய், 30 நவம்பர், 2010

டேட்டிங்

"அட ச்சே.இந்த ஏரியால எருமைங்க தொந்தரவு ஜாஸ்தி ஆயிடிச்சி.காலில எப்புடி கத்துதுங்க" - கண் முழிக்க முடியாம எந்திரிச்சி பாத்தான் சிவா.

டிவி-ல காதலின் தீபம் பாட்டு ஓடின்னு இருக்க அதுக்கு லிப் மூமென்ட் குடுத்து உருகி பாடினு இருந்தான் மருது .அதுக்கு பக்கத்துல சந்துரு காதை மூடிட்டு தூங்க ட்ரை பண்ணிட்டு இருந்தான்.


"அதான் நீ பாடறியே - இது என்னத்துக்கு ??" - ரிமோட் எடுத்து ஆப் பண்ணான் சிவா.

"அட ச்சீ ரிமோட் குடு "

"நீதான் உன் ஹரிஹரன் வாய்ஸ் ஓபன் பண்ணியா.நான் கூட நம்ம ஏரியா எருமை எல்லாத்தையும் தப்பா பேசிட்டேன்."

"விடு மச்சி.காலில எந்திரிச்ச உடனே போய் அதுங்க கிட்ட சாரி கேட்டுடலாம்" - தூக்கத்தில் உளறினான் சந்துரு.

வாட்ச் எடுத்து சிவா டைம் பாக்க மணி காலைல 6.

"என்னடா ஆச்சி உனக்கு.எப்புமே அலாரம் அடிச்சா கூட ஆப் பண்றதுக்கு 6 மணி நீ எந்தரிசிதது இல்லியே.அதுவும் இன்னைக்கி சண்டே." - சிவா .

"ஒன்னும் இல்ல மச்சி.நீ தூங்கு"


"கொஞ்ச நாள் உன் activities சரி இல்லையே.வழக்கத்துக்கு மாதிரி இல்லாம இன்னைக்கி உன் மொகத்துல சந்தோஷ ரேகை அதிகமா தெரியுதே.என்னடா மேட்டர் ?"

"லைட் போடாம பாத்தா அவன் அப்படி கொடூரமா தாண்டா தெரிவான்" - இன்னமும் தூக்கத்தில் பேசிட்டு இருந்தான் சந்துரு.

"லவ் மூட் ஸ்டார்ட் ஆனா எல்லாம் அப்படி தான் "


இவ்ளோ நேரம் தூங்கிட்டு இருந்த சந்துரு இந்த பதிலை கேட்டஉடனே விழுந்தடிச்சி எந்திரிச்சான்.

"என்ன சொல்ற மச்சி ?? லவ் மூடா ?? "


"ஆமா"

" என்னடா சொல்லற." அதிர்ச்சியுடன் "யாரு அந்த பொண்ணு ?" - சிவா

"என்னோட காலேஜ் மேட் மச்சி.கொஞ்ச நாள் முன்னாடி திரும்ப மீட் பண்ணேன் .ரெண்டு பேரும் கொஞ்ச நாலா பேசிட்டு இருக்கோம்.இன்னைக்கி 5 மணிக்கி தனியா மீட் பண்ணலாம்னு பிளான். "


"அட பாவி.சொல்லவே இல்ல.அப்போ டேட்டிங்?"

" எஸ். பாரிஸ்டா மீட் பண்ணலாம்னு பிளான்."

"டேய் நெசமாத்தான் சொல்லறியா? இல்ல நைட் ஏதாவது கனவு கண்டியா?"

தனக்கு வந்த எஸ்.எம்.எஸ் எடுத்து காமிச்சான் மருது.ரெண்டு பேருக்கும் உள்ளுக்குள்ள புகைய ஆரமிச்சது.,இருந்தாலும்

"மச்சி எங்கள்க்கும் இன்ட்ரோ குடுடா"

"பாக்கலாம்.ட்ரை பண்ணறேன் "

இதுக்கு மேல கேட்டு அவமான பட வேணாம்னு ரெண்டு பேரும் அமைதி ஆனாங்க.

மணி 4 ஆக,மருது ரெடி ஆயிட்டு கெளம்ப இருந்தான் .

"மச்சி இருடா நாங்களும் வரோம்.அப்படியே நாயர் கடைல காபி அடிச்சிட்டு போலாம்" - சந்துரு ரெடி ஆனான் .

"உஷ் நான் basically பசங்களோட எல்லாம் காபி சாப்டறது இல்ல.இருந்தாலும் நீ ஆசபட்டுட்ட சரி வா போலாம்" .

"நாராயணா இந்த கொசு தொந்தரவு தாங்க முடில.மருந்து அடிச்சி மொதல்ல கொல்லனும். " இப்படி ஒரு வழியா காபி முடிஞ்சி மருது டேட்டிங்க்கு கெளம்பிட்டான்.

மருது திரும்ப வரும்பொழுது மணி 8.

"அப்புறம் மச்சி.இன்னைக்கி பார்ட்டி தான்.எல்லாரும் மருது பேர்ல மொய் எழுதிடலாம்." - சிவா.

சலிப்புடன் சிவா பக்கத்துல போன மருது "ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒவ்வொரு பீலிங் மச்சி.இதுக்கான அர்த்தம் இன்னைக்கி தான் எனக்கு முழுசா புரிஞ்சது".

"சரி சரி.பேச்சை குற.கதைய சொல்லு"

"நான் கரெக்டா 5 மணிக்கி எல்லாம் போய் ஒரு கார்னர் டேபிள் புடிச்சி அவளுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன்"

"கடைசி வரைக்கும் அவ வரவே இல்லையா?" - ஆர்வத்துடன் கேட்டான் சந்துரு.

"நீ நெனைக்கிற மாதிரி எல்லாம் இல்ல .அவ 5:30 பக்கமா அங்க வந்தா.வந்த உடனே "சாரி அயம் லேட்" அப்படின்னு சொன்னா

"இட்ஸ் ஓகே.டேக் யுவர் சீட்" - இது நானு.

"தேங்க்ஸ்.ஹவ் யு டூஇங்?"

"ஓக்ஸ்.யு ஆர் லுகிங் ப்ரெட்டி டுடே" - அப்படின்னு பிட்ட போட்டேன்.

சந்துரு செம காண்டு ஆயிட்டான் - "டேய் நம்ம ஹாரி பாட்டர் படமே அரிசிவமூர்த்தி - தமிழில் அப்படின்னு டப் பண்ணி பாக்கற ஆளுங்க.டப் பண்ணி சொல்லுடா ஒன்னும் புரில".

"ப்லொவ் மிஸ் ஆகுதுடா.நீ சொல்லு மச்சி" - சிவா.

"அப்படியே கொஞ்ச நேரம் பேசிட்டு ஆர்டர் பண்ணோம்."

"ஹ்ம்ம்.அப்பறம்?"

"ஒரு முக்கியமான விஷயம்" - அப்படின்னு ஆரமிச்சா . "அதுக்கு தான் இங்க வர சொன்னேன்.தப்பா எடுத்துக்காத .உன்னால கண்டிப்பா இத பண்ண முடியும்." அப்படின்னு சொல்லிட்டு அவ வெச்சிருந்த பாக்ல இருந்து ஒரு பேப்பர் எடுத்தா.

"அட பாவி - லவ் லட்டர்ஆ "

"இல்ல.அங்க தான் விதி பெருசா வேலைய காட்டிச்சி"

"என்ன?"

"அவ ரிலையன்ஸ் லைப் இன்சூரன்ஸ்-ல வேலைல இருக்காலாம்.ஒரு புது பாலிசி இப்போ வந்திருக்குதாம்.அத பத்தி விளக்கம் சொல்ல தான் உன்ன இங்க கூப்டேன் .இந்த வாரதுக்குள்ள கண்டிப்பா ஒருத்தர புடிக்கணும் .நீதான் பாலிசி போட்டு எனக்கு ஹெல்ப் பண்ணனும் அப்படின்னு சொல்லிட்டா.எனக்கு பப்பி சேம் ஆகி போச்சி மச்சி."

இது வரைக்கும் அமைதியா கேட்டுட்டு இருந்த சிவா,சந்துரு இப்போ கால் கொட்டி சிரிக்க ஆரமிச்சிட்டாங்க.

"மச்சி. அவ உன்னைய மளிகை சாமான் வாங்கிட்டு வர சொல்லிருக்கா பா".

புதன், 24 நவம்பர், 2010

கால்பந்து

புட்பால் எது வாலிபால் எது அப்படின்ற குழப்பம் இன்னமும் பல பேர்க்கு இருக்கு என்னையும் சேர்த்து. சின்ன வயசுல பல தடவ வாலிபால் வெச்சி புட்பால் விளையாடி என்னோடு தண்டனை வாங்கின சில பேர்க்கு இது புரியும்.ஒரு வகுப்பில் உள்ள நாற்பது பேரும் ஒரு பந்தை துரத்திட்டு ஓடிட்டு இருப்போம். புட்பால் உதைத்ததை விட நண்பர்களின் காலை உதைச்சது தான் ஜாஸ்தி .

மேலே சொன்ன எல்லா விஷயமும் கோபிக்கு பொருந்தும். கோபி - காலேஜ்ல படிப்பை தவிர எல்லாத்தயும் பாஸ் பண்ணிட்டு இருக்கறவன் டைம் பாஸும் சேர்த்துதான்.லீவ் நாட்களில் தன் நண்பன் முரளி ரூமே கதி என்று கிடப்பான்.அப்படி தான் ஒரு சண்டே முரளி ரூம்க்கு போனான்.

காலிங் பெல் அடிக்க கதவை திறந்தது வாசு.

" மச்சி வாசு டா. என் பிரண்டு நான் சொல்லிருக்கேன் இல்ல." - முரளி அறிமுகம் செய்தான்.

" ஹாய் பாஸ் " - "ஹாய் ".

ஏற்கனவே வாசு பெரிய டூமான்கோலி அப்படின்னு முரளி கோபி கிட்ட சொல்லி வெச்சிருந்தான்.அதனால கொஞ்சம் அடக்கியே வாசித்தான் கோபி.

"இன்னைக்கி என்ன பிளான் மச்சி " - பிட்டை போட்டான் கோபி.

"இன்னைக்கி மேட்ச் இருக்கு மச்சி.வாசு பாக்கணும்னு சொல்லறான் " - முரளி.

"கிரிக்கெட் மேட்ச் எதுவும் இல்லியே இன்னைக்கி" - கோபி

"புட்பால் மேட்ச் பாஸ். வேர்ல்ட் கப் நடந்துட்டு இருக்கே.நீங்க பாக்கறது இல்லியா.இன்னிக்கி இங்கிலாந்த் அண்ட் பிரேசில் மேட்ச். பட்டய கெளப்பும்" - வாசு

ஒரு கணம் ஐயோ புட்பால் என்று விபரீதம் தோன்றி மறைந்தாலும் வெளிய காட்டமா
"ஆமா.நானும் மறந்தே போயிட்டேன்." - என்று பில்ட் அப் கொடுத்தான் கோபி.

"எனக்கு புட்பால் மேல ஆர்வம் ஜாஸ்தி.எங்க காலேஜ் டீம்லயும் நான் இருக்கேன் " - வாசு.

அது ஆர்வம் இல்ல ஆர்வ கோளாறு அப்படின்னு மனசுல நெனச்க்கிட்டான் கோபி.ஆனாலும் வெளிய - "எனக்கும் ஆர்வம் ஜாஸ்தி .ஆனா என்ன பண்ண எங்க காலேஜ்ல புட்பால் கிரௌண்ட் இல்ல."

"சரி உங்களக்கு யார புடிக்கும் " - என்று வாசு ஆரம்பிக்க . புட்பால நம்ம அறிவு - குட் மார்னிங் மை நேம் இஸ் கோபி ரேஞ்சு தான் அதனால இதுல இருந்து எஸ்கேப் ஆகணும்னு பேச்சை மாத்தினான் கோபி ."மேட்ச் எதுல வருது.ஆரமிசிட போகுது.டிவி போடுங்க".

நல்ல வேலையாக மேட்ச் ஆரமிக்க நிம்மதி ஆனான் கோபி.


புட்பால் அதிகம் பார்க்காத மக்களுக்கு வரும் முதல் பெரும் சோதனை கோபிக்கும் வந்தது. வேற ஒன்னும் இல்ல எந்த டீம் இங்கிலாந்த்,எந்த டீம் பிரேசில் அப்படின்னு கண்டு புடிக்கறது தான்.

வாசு கிட்ட கேக்கறத விட முரளி கிட்ட கேட்டா சின்ன அவமானத்தோட போய்டும்னு அவன் கிட்ட போனான்.முரளி ஆர்வமா மேட்ச் பாத்துன்னு இருந்தான்.

"மச்சி - இங்கிலாந்த் டீம் டிரஸ் செம கன்றாவியா இருக்கில" - கோபி.

"ரெண்டுத்துல எதுடா இங்கிலாந்த்.நானும் ஆரமிச்சதுல இருந்து அததான் யோச்சிட்டு இருக்கேன் " - முரளி கவுன்ட்டர் குடுக்க கண்ணீர் வராத குறையாக அவன பார்த்தான் கோபி.அது சரி,நம்ம கூட சேருற கோஷ்டி நம்மள மாதிரி தானே இருக்கும்னு தெரிஞ்சது அவனுக்கு . "y blood same blood" கதை ஆனதால டீம் தெரியாம ரெண்டு பேரும் பாக்க ஆரமிச்சாங்க.

அப்பபோ வாசு ஆப் சைடு,பெனால்டி,கார்னர் கிக் அப்படின்னு சொல்ல இவுங்களும் ரியாக்டியன் குடுத்துட்டு இருந்தானுங்க.

" மச்சி விட்ரா.கோல் போட்டா கண்டுபுடிச்சிடலாம் " - முரளி.

இவுங்க நேரம் முதல் பாதி கோல் இல்லாமலே முடிஞ்சுது.

"ச்சே மேட்ச் ஒரே மொக்கையா போச்சி " - வாசு.மேட்ச் மட்டுமா .சரி அவமான பட்டாலும் பரவா இல்ல கேட்டுடலாம் அப்படின்னு ரெண்டு பேரும் கேட்டானுங்க.

"அட பாவிங்களா.அப்போவே கேட்டுருந்தா சொல்லிருப்பனே. வெள்ளை கலர் பிரேசில் மஞ்சள் கலர் இங்கிலாந்த்." - தெளிவாக வாசு சொல்லிட்டு இருக்கும் போதே முதல் கோல் அடிச்சானுங்க மஞ்சள் கலர் இங்கிலாந்த்.

இவுங்களே கோல் போட்ட மாதிரி கத்தி ஆர்பாட்டம் பண்ணிட்டு இருக்க ஸ்கோர் போர்டு பெருசா வந்தது (பிரேசில் 1 - இங்கிலாந்த் 0) அப்படின்னு.

முரளி ,கோபி ரெண்டு பேருக்கும் பல்பு எரிய - அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா - என்று வாசுவின் மொபைல் ரிங்டோன் அடிச்சது.