"மச்சி நீ நடுவுல வராத.இவன போட்டு இன்னைக்கி மிதிச்சா தான் என் ஆத்திரம் அடங்கும்" - செம கோவத்துல இருந்தான் வசந்த்.
"பிரச்னை என்னனு மட்டும் சொல்லு.நாங்களும் ப்ரீயா தான் இருக்கோம்.உனக்கு ஹெல்ப் பண்ணறோம்.தெளிய வெச்சி தெளிய வெச்சி 3 நாளைக்கி அடிப்போம்" .
அடிக்கறத நிறுத்திட்டு ப்ளாஷ்பாக் ஓட்ட ஆரமிச்சான் வசந்த்.
"போன வாரம் அவன் என்ன கேட்டான் ஞாபகம் இருக்கா?"
"அவன் எப்பவுமே எல்லார்கிட்டயும் ஏதாவது கேட்டுட்டே தான் இருக்கான்.இதா இப்போ கூட அங்க பாரு அந்த பொண்ணு கிட்ட டைம் கேட்டுட்டு இருக்கான்.மேட்டர நீயே சொல்லு" - பிரகாஷ்.
"மேக்ஸ் எக்ஸாம் ஏற்கனவே ரெண்டு தடவ கப் வெச்சிட்டேன்.அரியர் வெச்ச மேட்டர் வீட்ல வேற தெரியாது .இந்த தடவ கண்டிப்பா கிளியர் பண்ணனும்.அதுக்கு நீதான் கத்து குடுக்கனும்னு கேட்டான்".
"ஒ அதுவா.சரி சரி அதுக்கு?"
"புக் நானே வெச்சிருக்கேன் என் வீட்டுக்கு வந்து சொல்லி குடு அப்படின்னு சொன்னான். நானும் சரி உன் வீட்ல யாரும் இல்லாத போது சொல்லு.நான் கண்டிப்பா வந்து சொல்லி குடுக்கறேன்னு சொன்னேன்"
"சரி .மேல?"
"நேத்தைக்கு மதியமா எனக்கு கால் பண்ணான்.மச்சி என் வீட்ல யாரும் இல்லடா அப்படின்னு சொன்னான்"
"ஓகே"
"நானும் அவசர அவசரமா கிளம்பி அவுங்க வீட்டுக்கு போனேன்."
"அப்புறம்"
"வீட்டுக்கு போய் பாத்த உடனே எனக்கு செம கடுப்பு ஆயிடிச்சி"
"ஏன்?"
"நிஜமாவே வீட்ல யாரும் இல்ல.வீடு பூட்டு போட்டு இருந்தது.இன்னைக்கி வந்து கேட்டா எல்லாரும் குடும்பத்தோட சர்க்கஸ் போயிருந்தோம் அப்படின்னு சொல்லிட்டு சிரிக்கிறான்". - சொல்லிட்டு வசந்த் கொல வெறியோட அருண் - ஐ பாத்துட்டு இருந்தான்
"இந்த காமெடி எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் மச்சி.இவன போட்டு அடிச்சிட்டு இருந்தியே அது எதுக்கு அத சொல்லுடா" - என்றான் பிரகாஷ்.
இப்போ பிரகாஷ் போட்டு அடிச்சிட்டு இருக்கான் வசந்த்.யாரு வந்து அத பஞ்சாயத்து பண்ண போறாங்கன்னு தெரில..?
ha ha ha
பதிலளிநீக்குhmmm. paravailla. nalla development.....
பதிலளிநீக்குஹ ஹ ஹ ஹ ஹா
பதிலளிநீக்குதம்பி... இந்த மொக்க இதுவே கடைசியா இருக்கட்டும்..
பதிலளிநீக்குநன்றி வினோத்.
பதிலளிநீக்குநன்றி திவ்யா.
நன்றி வேலன்.
@சத்யா : மொக்கைல ஏது ஆரம்பம்,கடைசி ?
sooper sir
பதிலளிநீக்குநன்றி மகேஷ் சார் :)
பதிலளிநீக்கு