"விட்ரா.எதோ தெரியாம கேட்டுட்டேன்.இந்த சின்ன விஷயத்துக்கு போய் இப்படி கத்துற ?"
"நேத்தைக்கு என்கிட்டே 200 ரூபா தான் இருக்குனு சலிப்பா சொல்லிட்டு இருந்தேன்.அதையும் மீறி இன்னைக்கி 1000 ரூபா நீட்டி சில்லரை இருந்தா குடு அப்படின்னு கேட்டு அவமான படுத்தற. எப்போ பாத்தாலும் சில்லரை வெச்சிருக்க நான் என்ன பஸ் கண்டக்டரா இல்ல கோயில் பூசாரியா?"
"ப்ரீயா விட்ரா.மறந்துட்டேன்" - சமாதான படுத்திட்டு இருந்தான் அன்பு.
ரெண்டு நாள் முன்னாடி ATM-ல பணம் எடுக்க போய் ஒரு 1000 ரூபாய் நோட் அன்பு கிட்ட வந்துடிச்சி.அதுக்கு சில்லற கேக்க போய் தான் இப்படி மணி கிட்ட வாங்கி கட்டிகிட்டான்.
"சரி இப்போ இத மாத்தறதுக்கு ஒரு ஐடியா குடு"
"இதுக்கெலாம் சரியான இடம் பெட்ரோல் பங்க் தான்.ஆனா இப்போ அவுங்களும் பந்த்.அதனால வேற எதாவது தான் யோசிக்கணும்"
"சரி வா தி.நகர் போலாம்.நீ புக் வேற வாங்கனும்னு சொன்ன இல்ல.ரெண்டு கல்லுல ஒரே மாங்கா" - மணி .
பஸ்ல ரெண்டு பேரும் தி.நகர் கிளம்பினார்கள்.
"மச்சி கண்டக்டர் பை நிறைய சில்லற வெச்சிருக்காரு.அவர் கிட்ட குடுத்து சில்லற மாத்திக்கலாம்" - அன்பு ஆயத்தமானான்.
"ஏற்கனவே ஒருத்தன் 10 ரூபாய் குடுத்து 2 ரூபாய் டிக்கெட் எடுத்தான்.அதுக்கே அவரோட ரெண்டு கிட்னியும் அவன் கேட்ட மாதிரி இன்னமும் வெறிச்சி பாத்துட்டு இருக்காரு.நீ மட்டும் போய் இந்த நோட் காமிச்ச ஒரு கலவரமே வெடிக்கும்.பாமிலி புல் Damage ஆயிடும்.யார் கிட்ட வேணும்னாலும் கேக்கலாம்,இவர்ட்ட மட்டும் வேணாம்".
தி.நகர் வந்து சேர்ந்து புக் ஸ்டோர் உள்ள போனாங்க.பாலகுருசாமி புக் ஒன்னு எடுத்திட்டு பில் போட வந்தான் அன்பு.
1000 ரூபாய் நீட்ட "சார் சில்லற இல்ல" - என்று கை விரித்தான் கடை ஆள்.
"மச்சி வேணும்னா ரெண்டு புக் சேர்த்து வாங்கிக்கலாமா."
"நம்ம என்ன புக் ஸ்டோரா ஆரம்பிக்க போறோம்.புக் குடுத்துட்டு வாடா".
முயற்சி தோல்வில முடிய தி.நகர் புக் ஸ்டோர் புல்லா ரவுண்டு விட்டானுங்க.எங்கயும் சில்லற கெடைக்கல.
"சரி அடுத்து எங்க போறது?" - அன்பு.
"சரி வா லேண்ட்மார்க் போலாம்.அங்க போய் புக் வாங்கிட்டு சில்லற மாத்திக்கலாம்" - மணி.
ரெண்டு பேரும் அங்க இருந்து கிளம்பன நேரம் மழை சரமாரியாக அடிக்க ஆரமிச்சது.பஸ்சில் ஏறி தொப்பலாக நனைந்து ஸ்பென்சர் கிட்ட வந்து சேந்தாங்க.ஸ்பென்சர் வாசலில் அவுங்களை மடக்கினான் ஒரு பிச்சைக்காரன்.
"ஐயா சில்லற காசு இருந்த போடுங்க".
"சத்திய சோதனை-டா அன்பு" - என்று பீல் பண்ண ஆரமித்தான் மணி.
பிச்சைக்காரனை விரட்டி விட்டுட்டு "மச்சி அவனுக்கும் நமக்கும் ஒரே வித்தியாசம் தான்.அவன் வெளிய நின்னுட்டு சில்லற கேக்கறான்.நம்ம உள்ள போய் சில்லற கேக்க போறோம்.செம காமெடியா இல்ல" - என்றான் அன்பு.அடிக்காத குறையா மணி முறைக்க அமைதி ஆனான்.
ஸ்பென்சர் உள்ளே நுழைந்தார்கள்.லேண்ட்மார்க் நோக்கி போயிட்டு இருந்தாங்க."மச்சி நான் வெயிட் போட்டுட்டேனாடா" அன்பு.
"இந்த நேரத்துல இந்த ஆராய்ச்சி ரொம்ப அவசியமா.ஒரு 1000 ரூபாய் இருக்கறதால நீ வெயிட் பார்ட்டி அப்படின்னு நெனைக்கலாம்.ஆனா வெயிட் போட்டுருக்க வாய்ப்பு இல்ல"
"இல்ல அங்க ஒரு வெயிங் மெசின் இருக்கு.வெயிட் செக் பண்ணிட்டு போலாம்"
"இந்த ரணகலதலையும் உனக்கு ஒரு கிளுகிளுப்பு கேக்குது.சரி சீக்கிரமா வா" .
வெயிட் பாத்த வேகத்துல வந்த அன்பு " எப்பயுமே வெயிட் பாத்துட்டு போனா எனக்கு ராசி டா.இப்போ பாரு எப்படி சில்லற தானா வந்து சேருதுன்னு"
"என்னடா லாஜிக் இது.ரெண்டுத்துக்கும் சம்பந்தமே இல்லையே.பாப்போம் அதையும்" - மணி.
லேன்ட்மார்க் உள்ள போய் அதே பாலகுருசாமி புக் எடுத்தான் அன்பு.நேரா கவுன்ட்டர் கிட்ட வந்து பில் போட்டுட்டு இருக்க நடுவுல அன்பு ,
"1000 ரூபாய் தான் இருக்கு.சில்லற குடுப்பிங்களா?" - அப்படின்னு டவுட் கேட்டான்.
பில் போடுற பொண்ணு நக்கலா சிரிக்க ஆரமிக்க.
தலைல அடிசிக்கிட்டான் மணி."டேய் மானத்த வாங்காத பைசா குடுத்து தொலடா".
1000 ரூபாய் நோட்டை பில்லுக்கு குடுத்த அப்பறமா நிம்மதி ஆனான் அன்பு.வெற்றி புன்னகை ரெண்டு பேரும் விட்ட நேரத்துல,
"சார் நோட் கிழிஞ்சிருக்கு.வேற இருந்தா குடுங்க" .
lol.. you got talent dude.. :)
பதிலளிநீக்குநன்றி டா கார்த்தி :)
பதிலளிநீக்குசரியான சில்ர பையன் டா நீ
பதிலளிநீக்கு