மேலே சொன்ன எல்லா விஷயமும் கோபிக்கு பொருந்தும். கோபி - காலேஜ்ல படிப்பை தவிர எல்லாத்தயும் பாஸ் பண்ணிட்டு இருக்கறவன் டைம் பாஸும் சேர்த்துதான்.லீவ் நாட்களில் தன் நண்பன் முரளி ரூமே கதி என்று கிடப்பான்.அப்படி தான் ஒரு சண்டே முரளி ரூம்க்கு போனான்.
காலிங் பெல் அடிக்க கதவை திறந்தது வாசு.
" மச்சி வாசு டா. என் பிரண்டு நான் சொல்லிருக்கேன் இல்ல." - முரளி அறிமுகம் செய்தான்.
" ஹாய் பாஸ் " - "ஹாய் ".
ஏற்கனவே வாசு பெரிய டூமான்கோலி அப்படின்னு முரளி கோபி கிட்ட சொல்லி வெச்சிருந்தான்.அதனால கொஞ்சம் அடக்கியே வாசித்தான் கோபி.
"இன்னைக்கி என்ன பிளான் மச்சி " - பிட்டை போட்டான் கோபி.
"இன்னைக்கி மேட்ச் இருக்கு மச்சி.வாசு பாக்கணும்னு சொல்லறான் " - முரளி.
"கிரிக்கெட் மேட்ச் எதுவும் இல்லியே இன்னைக்கி" - கோபி
"புட்பால் மேட்ச் பாஸ். வேர்ல்ட் கப் நடந்துட்டு இருக்கே.நீங்க பாக்கறது இல்லியா.இன்னிக்கி இங்கிலாந்த் அண்ட் பிரேசில் மேட்ச். பட்டய கெளப்பும்" - வாசு
ஒரு கணம் ஐயோ புட்பால் என்று விபரீதம் தோன்றி மறைந்தாலும் வெளிய காட்டமா
"ஆமா.நானும் மறந்தே போயிட்டேன்." - என்று பில்ட் அப் கொடுத்தான் கோபி.
"எனக்கு புட்பால் மேல ஆர்வம் ஜாஸ்தி.எங்க காலேஜ் டீம்லயும் நான் இருக்கேன் " - வாசு.
அது ஆர்வம் இல்ல ஆர்வ கோளாறு அப்படின்னு மனசுல நெனச்க்கிட்டான் கோபி.ஆனாலும் வெளிய - "எனக்கும் ஆர்வம் ஜாஸ்தி .ஆனா என்ன பண்ண எங்க காலேஜ்ல புட்பால் கிரௌண்ட் இல்ல."
"சரி உங்களக்கு யார புடிக்கும் " - என்று வாசு ஆரம்பிக்க . புட்பால நம்ம அறிவு - குட் மார்னிங் மை நேம் இஸ் கோபி ரேஞ்சு தான் அதனால இதுல இருந்து எஸ்கேப் ஆகணும்னு பேச்சை மாத்தினான் கோபி ."மேட்ச் எதுல வருது.ஆரமிசிட போகுது.டிவி போடுங்க".
நல்ல வேலையாக மேட்ச் ஆரமிக்க நிம்மதி ஆனான் கோபி.
புட்பால் அதிகம் பார்க்காத மக்களுக்கு வரும் முதல் பெரும் சோதனை கோபிக்கும் வந்தது. வேற ஒன்னும் இல்ல எந்த டீம் இங்கிலாந்த்,எந்த டீம் பிரேசில் அப்படின்னு கண்டு புடிக்கறது தான்.
வாசு கிட்ட கேக்கறத விட முரளி கிட்ட கேட்டா சின்ன அவமானத்தோட போய்டும்னு அவன் கிட்ட போனான்.முரளி ஆர்வமா மேட்ச் பாத்துன்னு இருந்தான்.
"மச்சி - இங்கிலாந்த் டீம் டிரஸ் செம கன்றாவியா இருக்கில" - கோபி.
"ரெண்டுத்துல எதுடா இங்கிலாந்த்.நானும் ஆரமிச்சதுல இருந்து அததான் யோச்சிட்டு இருக்கேன் " - முரளி கவுன்ட்டர் குடுக்க கண்ணீர் வராத குறையாக அவன பார்த்தான் கோபி.அது சரி,நம்ம கூட சேருற கோஷ்டி நம்மள மாதிரி தானே இருக்கும்னு தெரிஞ்சது அவனுக்கு . "y blood same blood" கதை ஆனதால டீம் தெரியாம ரெண்டு பேரும் பாக்க ஆரமிச்சாங்க.
அப்பபோ வாசு ஆப் சைடு,பெனால்டி,கார்னர் கிக் அப்படின்னு சொல்ல இவுங்களும் ரியாக்டியன் குடுத்துட்டு இருந்தானுங்க.
" மச்சி விட்ரா.கோல் போட்டா கண்டுபுடிச்சிடலாம் " - முரளி.
இவுங்க நேரம் முதல் பாதி கோல் இல்லாமலே முடிஞ்சுது.
"ச்சே மேட்ச் ஒரே மொக்கையா போச்சி " - வாசு.மேட்ச் மட்டுமா .சரி அவமான பட்டாலும் பரவா இல்ல கேட்டுடலாம் அப்படின்னு ரெண்டு பேரும் கேட்டானுங்க."அட பாவிங்களா.அப்போவே கேட்டுருந்தா சொல்லிருப்பனே. வெள்ளை கலர் பிரேசில் மஞ்சள் கலர் இங்கிலாந்த்." - தெளிவாக வாசு சொல்லிட்டு இருக்கும் போதே முதல் கோல் அடிச்சானுங்க மஞ்சள் கலர் இங்கிலாந்த்.
இவுங்களே கோல் போட்ட மாதிரி கத்தி ஆர்பாட்டம் பண்ணிட்டு இருக்க ஸ்கோர் போர்டு பெருசா வந்தது (பிரேசில் 1 - இங்கிலாந்த் 0) அப்படின்னு.
முரளி ,கோபி ரெண்டு பேருக்கும் பல்பு எரிய - அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா - என்று வாசுவின் மொபைல் ரிங்டோன் அடிச்சது.
நல்லா தேறிட்ட மச்சி..பட்டய கேளப்பு...
பதிலளிநீக்குmachi.. Y blood same blood??? :)
பதிலளிநீக்குflow super..
பதிலளிநீக்குcontinue maadi.. :)
dai madraasa vittu konjam veliyavaada. un tamil konjam ஜாஸ்திya irukku .
பதிலளிநீக்குடூமான்கோலி..lol.... அப்பாடக்கரு-க்கப்புறம் தமிழ் அகராதியில சேர்க்க வேண்டிய வார்த்தை
பதிலளிநீக்கு//புட்பால் உதைத்ததை விட நண்பர்களின் காலை உதைச்சது தான் ஜாஸ்தி // - அருமை!
பதிலளிநீக்கு//அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா - என்று வாசுவின் மொபைல் ரிங்டோன் அடிச்சது.// - தொப்பி தொப்பி!!
சகோதரம் அருமை.. அப்படியே followers பக்கத்தையும் சேர்த்தால் தங்கள் தளம் வர இலகுவாயிருக்கும்... அத்துடன் word verification ஐயும் எடுத்து விட்டால் கருத்திட இலகவாயிருக்கும்...
பதிலளிநீக்குநண்பர்களே தங்கள் கருத்துக்களுக்கு நன்றி
பதிலளிநீக்கு