திங்கள், 15 நவம்பர், 2010

முதல் முதலாய்

பதிவு உலகில் எனது முதல் பதிவு. தமிழில் ஏதேனும் தவறு இருந்தால் மன்னித்தருள்க.

இந்த பதிவு தலைப்புக்கும் இங்க எழுத போறதுக்கும் என்ன சம்பந்தம் அப்படின்னு கேக்கற சில பேருக்கு நான் சொல்லற ஒரே விஷயம் - அஜித் நடித்த ஜி படத்தோட டைட்டில் மற்றும் கதைக்கு என்ன சம்பந்தமோ அதே தான் இங்கியும். இவன் தல படம் பத்தி தப்பா பேசறான் தளபதி ரசிகனா இருப்பான் போல அப்படின்னு அரசியல் பண்ணிடாதீங்க. ஏன்னா தல,தளபதி படங்கள் ரிலீஸ் ஆனா முதல் நாள் படம் பார்த்து மொக்க வாங்கன பல பேர்ல நானும் ஒருவன் .

சரி நா வந்த வேலைய ஆரமிக்கறேன்.

இனி வரும் சம்பவங்கள் மற்றும் கதாபாத்திரங்கள் யாவும் கற்பனையே அப்படின்னு மொத்தமா சொல்ல முடியாது. கொஞ்சம் கொஞ்சம் உண்மைகளும் உண்டு.

எல்லாருடைய வாழ்க்கையிலும் முதல்முதலாக இருக்கும் அனைத்துமே இனிமையான ஒன்னு.உதாரணமாக சூப்பர் ஸ்டார் படம் முதல் நாள் முதல் ஷோ, இந்த மாதிரி ஒரு பீலிங்க்ல தான் வீரபாகு இருந்தான்.


வீரபாகு - இப்படி சொன்னவுடனே கணபதி அயர் பேகரி,அவுங்க அக்கா சூப்பர் பிகுர் அப்படின்னு எல்லாம் நெனசீடாதீங்க. இவன் சேலம் பக்கத்தில் ஒரு கிராமத்தில் பிறந்தவன். அவன் இன்னைக்கி முதல் முதலாக தனது வாழ்வில் வரலாறு சிறப்பு மிக்க நிகழ்ச்சி ஒன்று நடக்க இருப்பதை எதிர் பார்த்து காத்து கொண்டு இருக்கிறான்.

இவன் இப்போது படித்து கொண்டு இருப்பது எட்டாம் வகுப்பு. அந்த விஷயம் நினைத்து ஏற்கனவே நேற்று இரவு முழுதும் தூங்க வில்லை. அவன் நண்பர்கள் எல்லாருக்குமே அது சாதாரண விஷயம். இவனுக்கு அப்படி இல்ல.

அவனின் நண்பன் சுருளி.



"எப்போடா நம்ம கெளம்ப போறோம் " - வீரபாகு மெதுவா ஆரம்பித்தான்.


"அட பாவி இப்போ மணி ஒன்பது தாண்டா ஆகுது . மதியமா எல்லாரயும் கூட்டிட்டு போவாங்க."


"எப்படி போக போறோம்"



"ஹ்ம்ம். பஸ்ல - தானா இருக்கும்"


ஒவ்வொரு மணி துளிகளும் அவனோட ஆர்வத்தை அதிக படுத்தி கொண்டே இருந்தது. சரியாக மணி ஒன்னு.அனைவரையும் பேருந்தில் அழைத்து செல்ல வகுப்பு ஆசிரியர் வந்தார். ஆர்வத்துடன் அனைவரும் கிளம்பினார்கள்.


சரியாக இருபது நிமிட பயணம். அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். வீரபாகு உடல் சிலிர்த்தது. அனைவரையும் உள்ளே அழைத்து சென்று இருக்கையில் அமர செய்தார் ஆசிரியர். தன் நண்பன் சுருளி அருகில் அமர்ந்தான் வீரபாகு.


"என்னடா எப்படி இருக்கு " - சுருளி கேட்டான்.


பதில் வரவில்லை. திரும்பி வீரபாகுவை பார்த்தான்.அவன் எழுந்து நின்று எதையோ தேடி கொண்டு இருந்தான்.சலிப்புடன் அமர்ந்த வீரபாகுவை பார்த்த சுருளி


" ஏண்டா என்ன ஆச்சி. என்ன அங்க தேடிட்டு இருக்க"


"இல்ல இவ்ளோ பெரிய எடத்துல ஒரு சின்ன டிவி வெச்சா எப்படி எல்லாராலையும் பாக்க முடியும் . அதான் வேற நல்ல எடம் இருக்கானு பாத்துட்டு இருந்தேன்."


விளக்குகள் அனைய.திரையரங்கில் டினோசார் போடும் சத்தம் ஆரம்பம் ஆகி கொண்டு இருந்து அந்த வெள்ளி திரையில்.

11 கருத்துகள்:

  1. gounderae , ellam namma pesura dialoge polave irukku. ennammo chat ellam onna serthu inga oru kathai ezuthirukka pola

    பதிலளிநீக்கு
  2. தம்பி.. இந்த வீரபாகு நம்மிடையே ஒருவர் போல?

    பதிலளிநீக்கு
  3. @ வினோத் : பப்ளிக் பப்ளிக்
    @ பாலா : நம்மை போல் ஒருவன்

    பதிலளிநீக்கு
  4. பாரேன்... இந்த பையனுக்குள்ளேயும் இவ்ளோ இருந்திருக்கு

    பதிலளிநீக்கு
  5. cha,ungalukulaium eppadi onnu eruku nu theriyame pocheeeee. Any way all the best for further best blogs. (mokkaiya illama urupadiya yeludhunga)

    பதிலளிநீக்கு
  6. உனக்கு ஏன் டா இந்த பொழப்பு.... ராத்திரி ஆட்டம் பாத்தவன் நீ..ஞாபகம் இருக்கட்டும் மச்சி...

    பதிலளிநீக்கு
  7. தம்பி சக்தி, வலைப்பதிவு உலகிற்குள் வந்தமைக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்!
    முதல் பதிவு மிகவும் விறுவிறுப்பாக இருந்தது.. தொடர்ந்து எழுது!

    அந்த வீரபாகு நம்ம பாலா தான? :)

    பதிலளிநீக்கு
  8. எல்லோரும் அள்ளிப் பருக வேண்டிய அமிர்தமடா இது...
    நான் பதிவலகத்தை சொன்னென் சகோதரா ஆரம்பமே அசத்தலாய் இருக்கிறது.. வாழ்த்துக்கள்
    தங்களுக்க வெற்றி கிட்டட்டும்..

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    http://mathisutha.blogspot.com/

    பதிலளிநீக்கு
  9. நண்பர்களே தங்கள் கருத்துக்களுக்கு நன்றி

    பதிலளிநீக்கு